விசாரணையில், அவர், அண்ணசிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா, என்பதும், பெங்களூரு என்.எம்.கே.ஆர்.வி., கல்லுாரியில் பி.ஏ., இதழியல் படிப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. அந்தப் பெண், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டுக்கு எதிராக பேசியதும் தெரிய வந்தது. இந்நிலையில், அந்த பெண் மீது, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமுல்யாவின் தந்தை (பெயர் வெளியிடப்படவில்லை), 'எனது மகள் அமுல்யா அப்படிச் சொல்லியது தவறு. அமுல்யா சமீபகாலமாக சில முஸ்லிம் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர். அவர் எனது பேச்சைக் கேட்பதே இல்லை' என, வருத்தம் தெரிவித்துள்ளார்.