மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சிவபெருமானை அம்பிகை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. சிவராத்திரி நாளில் விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பகலில் விரதம் இருக்கும் பக்தர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவர்.
சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நேற்று சிவாலய ஓட்டம் தொடங்கியது. காவி உடை அணிந்தும், கையில் விசிறியுடனும் கோவிந்தா, கோபாலா என்ற நாம முழக்கமிட்டபடி பக்தர்கள் ஓடினர். திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவிதாங்கோடு, திருநட்டாலம் உள்ளிட்ட சிவாலயங்களுக்கு 108 கிலோ மீட்டர் பயணம் செய்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்