வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க 4 மருந்துகள் பரிசோதனை செய்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு சிறந்த சிகிச்சையை கண்டறிய உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. இது குறித்து அதன் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில்,
நான்கு மருந்துகள் கொரோனா வைரஸ் (கோவிட் 19) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். இதில் ஒரு மருந்து, எபோலோவுக்கும், மற்றொன்று ஆன்டிமலேரியலுக்கும், மீதமுள்ள இரு மருந்துகள் எச்.ஐ.வி.,க்கும் சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டதாகும்.
இந்த பரிசோதனை, உலகம் முழுதும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும். பரிசோனை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், தங்கள் நோயாளியின் முன்னேற்றத்தை நேரடியாக உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கலாம், என்றார்.
கொரோனாவை தடுக்கும் நான்கு மருந்துகள்