புதுடில்லி: கொரோனா வைரசிற்கு எதிரான போரில் போர் வீரர்களாக கருதப்படும் டாக்டர்கள் உள்ளிட்டவர்களின் மனதிடத்தை உடைக்காதீர்கள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனை பொருட்படுத்தாமல், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை போலீசார் லத்தியால் அடித்து காயப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. காரணமில்லாமல் வெளியே வரும் நபர்கள் மட்டுமல்லாமல், மருத்துவ சேவை செய்ய வாகனத்தில் செல்பவர்களையும் போலீசார் தாக்குவதாக புகார் எழுந்தது.